Mar 16, 2026
Thisaigal NewsYouTube
குற்றவியல் வழக்குகளை ரத்து செய்யும்படி டாயிம் மனு
தற்போதைய செய்திகள்

குற்றவியல் வழக்குகளை ரத்து செய்யும்படி டாயிம் மனு

Share:

சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என்று கூறி, கணவன் மனைவி என்ற முறையில் தங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன் மற்றும் அவரின் துணைவியார் நைமா அப்துல் காலித் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று டாயிம் ஜைனுதீனும், அவரின் மனைவியும் ஏற்கனவே ஒரு வழக்கை பதிவு செய்துள்ள வேளையில் தற்போது, தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

தங்களின் குடும்ப வழக்கறிஞர் நிறுவனமான திரு. டாமி தாமஸ் சட்ட நிறுவனத்தின் மூலமாக டாயிம் ஜைனுதீனும், அவரின் மனைவியும் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

Related News