கோலாலம்பூர், செதாப்பா, டனாவ் கோத்தா வில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ போலீஸ் நிலையத் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் தெரிவித்தார்.
கழுத்து,காது மற்றும் உடலின் இதர பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சாலையோரத்தில் லோரி ஒன்றில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த 56 வயதுடைய நபரை , மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் 36 மற்றும் 37 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அஷாரி அபு ஸமாஹ் குறிப்பிட்டார்.








