Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பூனைக்குட்டியை உயிருடன் எரித்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பூனைக்குட்டியை உயிருடன் எரித்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மே 03-

பூனைக்குட்டி ஒன்றை உயிருடன் எரித்ததாக இளைஞன் ஒருவர் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

சிறார் குற்றவாளியான 13 வயது அந்த இளைஞன், மாஜிஸ்திரேட் நிக் சித்தி நோராஸ்லினி நிக் முகமது ஃபைஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20,000 வெள்ளி அபராதம் மற்றும் கூடிய பட்சம் 100,000 வெள்ளி அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பிற்பகல் 1.08 மணியளவில் காஜாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பூனைக்குட்டி ஒன்றுக்கு உயிருடன் தீ வைத்து காயப்படுத்தியதாக அவ்விளைஞன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்