Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க நிதியைப் பயன்படுத்தக் கூடாது !
தற்போதைய செய்திகள்

அரசாங்க நிதியைப் பயன்படுத்தக் கூடாது !

Share:

அரசாங்க நிதியை தேர்தலின்போது பயன்படுத்தக் கூடாது எனும் தடையை தேர்தல் குற்றங்கள் சட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என பெர்சே அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

தேர்தல் லஞ்சம் எனக் கருதப்படும் எந்தவொரு கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கையும் தவிர்ப்பதற்காக அப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அபராதத் தொகையை அதிகரிப்பது, தேர்தல் செலவின அறிக்கையைத் தணிக்கை செய்வது போன்ற தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். 10 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான அபராதத்தை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

2003 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டத்தில் உள்ள பலவீனங்களைச் சமாளிப்பதைத் தவிர வேறு எந்த கணிசமான திருத்தங்களும் செய்யப்படவில்லை என்பதால், இந்த முன்மொழிவு செயல்படுத்தப்பட வேண்டும் என்று பெர்சே குறிப்பிட்டது.

Related News