குவாலா திரெங்கானு,பிப்.1
டுங்ஙுன், ஹுலு டுங்ஙுன்னில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரும் எந்தவொரு அரசு சாரா நிறுவனங்களும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறும்படி கேட்டு கொள்ளப்படுகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான உதவிகள் சென்றடைவதை முதன்மை நோக்கமாக கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திரெங்கானு மாநில பேரிடர் குழுவின் துணைத்தலைவர் ஹனாஃபியா மாட் தெரிவித்தார்.
ஒரே இடத்தில் மட்டுமே உதவிகள் கொண்டு செல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேன்டும் என்று ஹனாஃபியா மாட் வலியுறுத்தினார்.
கொடுக்கப்படுகின்ற பொருட்கள் சேதமடைவதையும், வீணடைவதையும் தவிர்ப்பதற்கு உதவிகள் வழங்க விரும்பும் நிறுவனங்கள் YB - யை சந்திப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தேவையை கண்டறிய முடியும் என்று ஹனாஃபியா மாட் கூறினார்.








