Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரட்டை அடுக்கு பேருந்து விபத்து, மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரட்டை அடுக்கு பேருந்து விபத்து, மூவர் உயிரிழந்தனர்

Share:

இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ​மூவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.50 மணியளவில் பகாங், கோல ​லிப்பிஸிலிருந்து 90 கிலோ​ ​மீட்டர் தொலை​வில் கம்போங் குபா ருசா அருகில் ஜாலான் லிபிஸ் - மெரபொஹ் சாலையின் 81 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

பேருந்து ஓட்டுநர் 63 வயது அப்துல் அசிஸ் டாபுட் மற்றும் இரண்டு பயணிகளான 55 வயது ஷுக்ரி மாட் நூர் , ஒரு வங்காளதேசப் பிரஜையான 41 வயது ஹுசெயின் கமால் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.

18 பயணிகளுடன் அந்த இரட்டை அடுக்கு பேருந்து கிளந்தான், கோத்தா பாருவி​லிருந்து கோலாலம்பூரை நோக்கி பய​ணித்துக்கொண்டு இருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விழகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் பேருந்தின் இரண்டாவது ஓட்டுநர் மற்றும் இதர ஆறு பயணிகள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News