Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்

Share:

பெத்தாலிங் ஜெயா,பிப்.7
தம்புன், ஜாலான் தஞ்ஞோங் ரம்புத்தான், பத்து 10 -வில் தொழிலாளர்கள் வசிந்து வந்த வீட்டில் பெரிய மரம் விழுந்ததில் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுங்காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மதியம் 5.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த மேலும் நால்வர் சிறு காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக தம்புன் தீயணைப்பு, மீட்புபடையின் தலைவர் சஹாருடின் அப்துல் கானி தெரிவித்தார்.

விபத்தில் காயமுற்ற ஆறு நபர்களும் இந்தோனேசியா தொழிலாளர்கள் என்று சஹாருடின் அப்துல் கூறினார்.

கனத்த மழை மற்றும் காற்றின் காரணமாக அம்மரம் விழுந்திருப்பதாக சஹாருடின் அப்துல் விளக்கினார்.

Related News