Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பீர்

கோலாலம்பூர், ஜூன்.14-

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாடுகளிலும் வான் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டுள்ள நிலையில் அந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

அதே வேளையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் விமானப் பயண அட்டவணைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களில் தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளுமாறு மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →