May 22, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கியுடன் இருந்த 15 வயது சிறுவன் கைது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கியுடன் இருந்த 15 வயது சிறுவன் கைது

Share:

ஜொகூர் பாரு, மார்ச் 4 -

15 வயதுடைய சிறுவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியதை தொடர்ந்து அச்சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோத்தா கினாபாலு, ஜாலான் காயு மாடாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஜன்னலுக்கு அருகில் ஆயுதங்களுடன் நிற்பதை போன்று அப்புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை 5:36 மணியளவில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினாபாலு போலீஸ் தலைவர் சைடி அப்துல்லா தெரிவித்தார்.

வீட்டை சோதனையிட்ட போது ஏ.கெ47 துப்பாக்கி உட்பட மற்றொரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக சைடி அப்துல்லா மேலும் விளக்கமளித்தார்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி காலை 9 மணியளவில் அச்சிறுவன் கையில் போலியான துப்பாக்கியுடன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் மற்றவர்களுக்கு அச்சுறுத்தியது விசாரணையில் தெரியவந்ததாக சைடி அப்துல்லா விவரித்தார்.

Related News