ஒரு வீடமைப்புப்பகுதியில் பெண்ணின் உள்ளாடையை திருடிய குற்றத்திற்காக கட்டுமானத் தொழிலாளி ஓருவக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதி மன்றம் இன்று 2,400 வெள்ளி அபராதம் விதித்தது. Liew Chee Hoong என்ற அந்த ஆடவர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி பண்டார் ஸ்ரீ டாமன்சாரா வீடமைப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
44 வயதுடைய அந்த ஆடவர் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Zhafran Rahim Hamzah அபராதத் தொகையை விதித்தார்.








