Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் குடும்ப வன்முறைகள்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநிலத்தில் குடும்ப வன்முறைகள்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜுலை மாதம் வரை குடும்ப வன்முறைகள் தொடர்பாக 727 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 1,285 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் இவ்வாண்டு முதல் அரையாண்டில் மேற்கண்ட எண்ணிக்கையில் குடும்ப வன்முறைகள் தொடர்பில் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.

குடும்ப வன்முறைகள் தொடர்பில் பெரும்பாலான சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள், 26 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று போலீஸ் புகார்களை அடிப்படையாக கொண்டு அறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குடும்பப் பெண்கள் ஆவர். அதேவேளையில் நிபுணத்துவ தொழில்துறையை சேர்ந்தவர்களும், படித்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News