கோலாலம்பூர், ஜூன் 04-
E.V. ( இ.வி.) எனப்படும் மின்சார வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து வாகனங்களின் சக்தியை அடிப்படையாகக் கொண்டு, சாலை வரி கட்டணம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.
பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் செல் மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளை கெண்ட Zero – emission அல்லது பூஜியம் வெளியேற்ற உமிழ்வைக் கொண்ட வாகனங்களுக்கு இந்த சாலை வரி கட்டண விகிதம் பொருந்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சாலை வரி புதிய கட்டணம் விகிதமானது, இயந்திர செயல்பாட்டில் உள்ள சராசரி வாகனங்களுக்கு விதிக்கப்படும் சாலை வரி கட்டண விகிதத்துடன் ஒப்பிகையில் 85 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மின்சார வாகனங்களுக்கு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் சாலைவரி இலவசமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.








