Aug 7, 2026
Thisaigal NewsYouTube
போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

Share:

காப்பார் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் நடத்தப்பட்ட ‘ஓப் கெத்தா’ (Op Getah) கூட்டு அமலாக்கச் சோதனையில், போலி மைக்காட் (MyKad) மற்றும் நண்பர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வேலை செய்த 22 இந்தோனேசியத் தொழிலாளர்கள் தேசியப் பதிவுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், வேலை பெறுவதற்காகத் தன் நண்பரின் மைக்காட்டை இரவல் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். மற்றொருவர், 300 ரிங்கிட் கொடுத்து போலி அடையாள அட்டையை வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இவர்களுடன் சேர்த்து, குடிநுழைவு சட்ட விதிகளின் கீழ் மேலும் 14 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு அவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்குமாறு முதலாளிகளுக்கு தேசிய பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News