May 22, 2026
Thisaigal NewsYouTube
அனுமதியின்றி இஸ்லாமிய கடிகாரங்களை விற்றதாக நிறுவனத்தின் இயக்குநருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி இஸ்லாமிய கடிகாரங்களை விற்றதாக நிறுவனத்தின் இயக்குநருக்கு அபராதம்

Share:

சிலாங்கூர், மே 24-

சட்டவிரோதமாக இஸ்லாமிய கடிகாரங்களை விற்றதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

34 வயது முகமது பஸ்ரி இப்ராஹிம் என்கிற அந்நிறுவனத்தின் இயக்குநர் மாஜிஸ்திரேட் சாய் குவான் ஹாக் மற்றும் நூர் ஹபிஸா ரஜூனி ஆகிய இருவர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து 13,500 வெள்ளி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 6(1) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் பத்து கேவ்ஸ்,தாமான் சமுதேரா-வில் உள்ள ஒரு வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News