Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டை முன்னிட்டு அதிரடி சோதனை நடவடிக்கைகள்
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு அதிரடி சோதனை நடவடிக்கைகள்

Share:

சீனப் புத்தாண்டை முன்னிட்டு இன்று பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் Op Bersepadu எனும் அதிரடிச் சோதனை நடவடிக்கையை சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்து போலிஸ் மேற்கொள்ள இருக்கிறது.

இம்மாதம் முழுக்க மேற்கொள்ளப்பட இருக்கும் இச்சோதனை நடவடிக்கையின் மூலம் , சாலைப் பயனர்கள் அதன் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது என அத்துறையின் இயக்குநர் Azrin Borhan கூறினார்.

லைசன்ஸ் இல்லாமல் வெளிநாட்டுவாசிகள் மலஏசியாவில் வாகனத்தை ஓட்டுவது குறித்து அவரிடம் வினவப்பட்டபோது, அபராதம் கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறான சிக்கலை, அடிக்கடி நடத்தப்படும் ரோந்து நடவடிக்கை மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

Related News