Jun 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ரோஹிங்கியாக்கள் குடியுரிமை கோரும் அபாயம்: சட்ட நிபுணர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் ரோஹிங்கியாக்கள் குடியுரிமை கோரும் அபாயம்: சட்ட நிபுணர் எச்சரிக்கை

Share:

மலேசியாவில் ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதால், எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் குடியுரிமை உட்பட பெரிய அளவிலான உரிமைகளைக் கோரும் அபாயம் உள்ளதாக அனைத்துலக சட்ட நிபுணர் பேராசிரியர் டாக்டர் சலாவதி மாட் பாசீர் எச்சரித்துள்ளார்.

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், 1970-களின் இறுதியிலிருந்து மலேசியாவில் மூன்று தலைமுறைகளாக வாழும் ரோஹிங்கியாக்கள், இங்குள்ள சூழலோடு முழுமையாக ஒன்றிணைந்து விட்டதாகக் குறிப்பிட்டார். மலாய் மொழியை சரளமாகப் பேசும் அவர்கள், நாட்டின் தொழிலாளர் சந்தையிலும், பொருளாதாரக் கட்டமைப்பிலும் தற்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, அனைத்துலக சட்டங்களின் விதிகளின்படி அவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்குரிய உரிமைகளைக் கோர வாய்ப்புள்ளது என்றும், இது வெறும் கற்பனையல்ல என்றும் அவர் கூறினார். எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தற்காலிக தீர்வுகளைத் தவிர்த்து, நாட்டின் எல்லையை முழுமையாக மூடுவது போன்ற தீர்க்கமான நீண்டகால முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News