May 22, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் பின்புறத்தில் நின்றவாரே சென்ற நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் பின்புறத்தில் நின்றவாரே சென்ற நபர் தேடப்படுகிறார்

Share:

டிரெய்லர் ஒன்று நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் பின்புறத்தில் எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் நின்றுக்கொண்டு சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுக்குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வந்த காணொளி ஒன்று தம்முடைய கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அந்நபர் தேடப்பட்டு வருகிறார் என்று கூலாய், மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Tan Seng Lee தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் செனாய் நோக்கிச் செல்லும் இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலையின் 35 ஆவது கிலோமீட்டரில் நடந்திருப்பதாக Tan Seng Lee கூறினார்.

36 வயதுடைய அந்த லாரி ஓட்டுநர் மேல் விசாரணைக்கு கூலாய் IPD
போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக Tan Seng Lee இன்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

வைரலாக பரவப்பட்டு வரும் காணொளியில் அந்நபர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்து கையில் ஒரு பையுடன் வேகமாக செல்லும் டிரெய்லர் பின்புறத்தில் நின்றுக்கொண்டு செல்வதை காணமுடிவதாக Tan Seng Lee மேலும் விளக்கினார்.

Related News