May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளை கடத்தியதாக இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளை கடத்தியதாக இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 12-

58.6 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருளை கடத்தியதாக இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

49 வயது தான் க்ஸியாவ் வெய் மற்றும் 36 வயது ஈ சோங் கியாட் ஆகிய அவ்விரு அந்நிய பிரஜைகளும் மாஜிஸ்திரேட் R Salini முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர்கள் தலை அசைத்தனர்.

இருந்த போதிலும், அவ்விருவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் தூக்குத்தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 39B(1) மற்றும் 39B(2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 29 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஜொகூர் பாரு, இஸ்கண்டார் புத்திரி, தாமான் ஹொரிசொன் ஹில்ஸ், ஜாலான் அஞ்சோங் 8/1 -வில் இக்குற்றத்தை புரிந்ததாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News