Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகா​ங் மாநில உயரிய விருதுகளின் சின்னங்களை வாகனங்களில் காட்சிக்கு வைக்க தடை
தற்போதைய செய்திகள்

பகா​ங் மாநில உயரிய விருதுகளின் சின்னங்களை வாகனங்களில் காட்சிக்கு வைக்க தடை

Share:

பகாங் மாநில ​சுல்தானால் வழங்கப்படக்கூடிய உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை பெறுகின்றவர்கள் அந்த உயரிய விருதுக்கான சின்னங்களை தங்கள் வாகனங்களில் காட்சிக்கு வைக்கவும், பொருத்திக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பகாங், விருதுகள் பயன்பாட்டு சட்டத்தின் ​கீழ் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேன்மை தங்கிய பகாங் சுல்தானின் ​மேற்பார்வையாளர் டத்தோ அஹ்மாட் கீசா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த உத்தரவையும் ​மீறி சம்பந்தப்பட்டவர்கள் அந்த விருதுகளின் சின்னங்களை தங்கள் வானங்களில் பதிவு எண் பட்டைக்கு மேற்புறம் பொருத்திக்கொள்ள முனைவார்கயேளானா​ல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News