ஷா ஆலாம்,ஜன.30
சிலாங்கூரில் உள்ள 20 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவி தேசிய முன்னணிக்காக ஒதுக்கப்பட்டு காத்திருந்தாலும், சிலாங்கூரில் எந்தப் பதவியையும் தேசிய முன்னணி வகிக்கப் போவதில்லை என அக்கட்சி நிராகரித்துள்ளது.
அம்னோவின் அந்த முடிவை மதித்து, காலியாக இருக்கும் அப்பதவிகளில் உடனடியாக யாரையும் நியமிக்கப் போவதில்லை என சிலாங்கூர் மாநில ஊராட்சி, சுற்றுலாத் துறை ஆட்சிக்குழு உறுப்ப்னர் எங் சூ லிம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், தேசிய முன்னணி அப்பதவிகளை வகிக்க முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 20 ஆம் நாள், தம் கட்சி வகிக்கின்ற அனைத்து ஊராட்சி மன்றப் பதவிகளைத் சிலாங்கூர் மாநில அரசிடமே திருப்பிக் கொடுக்க அம்னோ முடிவு செய்திருந்தது.








