May 22, 2026
Thisaigal NewsYouTube
உயர் கல்வியை மேற்கொள்ளப் போகிறாராம்
தற்போதைய செய்திகள்

உயர் கல்வியை மேற்கொள்ளப் போகிறாராம்

Share:

கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாட்டின் அடுத்தப் பிரதமரும் இவரே என்ற பெரிய அறிவிப்புடன் பாரிசான் நேஷனலின் தேர்தல் சுவரோட்டிகளிலும் அமர்களப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, தமது லட்சியக் கனவு நிறைவேறாததைத் தொடர்ந்து தற்போது உயர் கல்வியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாரிசான் நேஷனலின் Poster Boy என்று அறிவிக்கப்பட்ட இஸ்மாயில் சப்ரி, வட மலேசிய பல்கலைக்கழகமான Univesiti Utara Malaysia-வில் உயர் கல்வி பயில்வதற்கான மாணவர் அட்டையை பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஓர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் தேர்வு செய்துள்ள மேல்படிப்பின் தன்மை குறித்து Bera நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி வெளியிடவில்லை.

Related News