Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தலைநகரில் திருவாசக முற்றோதல் பெருவிழா

Share:

திருவாசக முற்றோதல் அடியார் திருக்கூட்டம் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலைத் திருத்தலத்தில் திருவாசக முற்றோதல் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

காலை 7.00 மணிக்கு இறைவழிபாட்டுடன் தொடங்கும் இப்பெருவிழா, இரண்டு அங்கங்களாக நடைபெறும். முதல் அங்கத்தில் காலை 7.45 மணி முதல் 12.00 மணி வரை திருவாசகம் 1 பாகம் ஓதப்படும்.

பிற்பகல் 12.30 மணி முதல் 3.00 மணி வரை திருவாசகம் 2 பாகம் ஓதப்படும். மதிய உணவு, தேநீர் உபசரிப்பு, பரிசளிப்பு விழா என நிகழ்வுகளுடன் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்ள அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

Related News