நாடு முழுவது அதிகமான சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களை பெர்க்கேசோ திறக்கவுள்ளது என மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுடனான ஆலோசகைக் கூட்டம் நடத்தப்பட்டதில், தற்போது அதிகரித்து வரும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கானத் தேவையை ஈடு செய்ய சாத்தியப்படுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒராண்டு காலக் கட்டத்தில் 9 ஆயிர பேருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் பீடித்திருப்பதாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் பெர்க்கேசோவின் சந்தாதாரர்கள் ஆவர் என்பது தமக்குக் கொடுக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் தெரிந்து கொண்டதாக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
பெர்க்கேசோவின் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தால் நோயாளிகளின் நிதிச்சுமை குறையும் மேலும், மருத்துவமனைகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றை அதிகம் நம்பி இருக்க வேண்டியதில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
தற்போது வரையில் பெர்க்கேசொவின் கீழ் கிள்ளான், ஷா ஆலாம், பத்து பகாட், குளுவாங் ஆகிய வட்டாரங்களில் 4 சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அடுத்த டயலிசிஸ் மையம் பேரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவக்குமார் மேலும் சொன்னார்.








