Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் 140 மில்லியன் ரிங்கிட்  மதிப்பில் புதிய ஜேபிஜே வளாகம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் 140 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் புதிய ஜேபிஜே வளாகம்

Share:

நெகிரி செம்பிலான், செனவாங்கில் 140 மில்லியன் ரிங்கிட் செலவில் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவின் புதிய வளாக கட்டடம் அடுத்த ஆண்டு கட்டப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்புதிய நவீன வளாகம், செனவாங்கில் உள்ள தற்போதைய ஜேபிஜே அலுவலக இடத்திலேயே கட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டுமானப் பணிகளுக்காகத் தற்போதைய கட்டடம் இடிக்கப்படவுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிரம்பான், எரா வாக் பகுதிக்கு ஜேபிஜே சேவைகள் தற்காலிகமாக மாற்றப்படும்.

இதற்கிடையில், நீலாய் நகராண்மைக் கழகக் கட்டடத்தில் 1.7 மில்லியன் ரிங்கிட் செலவில் மேம்படுத்தப்பட்டு, கடந்த ஜூன் 8 முதல் முழுமையாக இயங்கி வரும் புதிய நீலாய் ஜேபிஜே கிளை அலுவலகத்தையும் அமைச்சர் அந்தோணி லோக் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்