May 22, 2026
Thisaigal NewsYouTube
தனது மனைவியுடன் சுற்றித்திரிந்த நபரை தாக்கிய கணவர்
தற்போதைய செய்திகள்

தனது மனைவியுடன் சுற்றித்திரிந்த நபரை தாக்கிய கணவர்

Share:

கடந்த சனிக்கிழமை, Negeri Sembilan, Bahau - வில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது மனைவியுடன் சுற்றித்திரிந்த ஆடவர் ஒருவரை சம்பந்தப்பட்ட கணவர் அடித்து காயம் விளைவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் பிரம்பினால் தாக்கப்பட்டு, அவரின் வேன் கண்ணாடிகளும் சேதமடைந்திருப்பதாக Jempol மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hoo Chang Hook தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் அடிக்கடி சந்தேகிக்கும் நபரின் மனைவியுடன் வெளியே சென்று சுற்றித்திரிவதாலும் பொறாமையின் காரணமாகவே இச்செயல் நிகழ்ந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக Hoo Chang Hook கூறினார்.

மேலும், இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 324 மற்றும் 427 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகிக்கும் நபர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் பதிலளித்தார்.

Related News