Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வங்கி ஊழியர் டோட்டோ 4டி ஜேக்போட்டில் 10 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்கி ஊழியர் டோட்டோ 4டி ஜேக்போட்டில் 10 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றார்

ஜோகூர் பாரு, ஜூன்.13-

வங்கி ஊழியர் ஒருவர், நான்கு இலக்க எண் லாட்டரி குலுக்கலான டோட்டோ 4டி ஜேக்போட்டில் 10 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஜோகூர் பாருவைச் சேர்ந்தவரான 49 வயது வங்கி ஊழியர், கடந்த ஜுன் 8 ஆம் தேதி எடுத்த லாட்டரி சீட்டில் மிகப் பெரிய பரிசுப் பணத்தை வென்றுள்ளார்.

புத்தப் பெருமானின் பிறந்த தினமான கடந்த விசாகத் தினத்தின் போது, பெளத்த ஆலயத்தில் தமக்கு வழங்கப்பட்ட நான்கு இலக்க எண்ணைத் தொடர்ந்து எழுதி வந்த நிலையில், அது ஜுன் 8 ஆம் தேதி குலுக்கலில் தமக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டத்தைத் தந்துள்ளது என்ற அந்த வங்கி ஊழியர் தெரிவித்துள்ளார் என்று டோட்டோ நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

3866 மற்றும் 5899 என்ற ஜோடி எண்களே தம்மை லட்சாதிபதியாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வங்கி ஊழியர் டோட்டோ 4டி ஜேக்போட்டில் 10 மில்லியன் ரிங்கிட... | Thisaigal News