Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விண்ணப்பங்கள் ஜூலை 4 வரை திறந்திருக்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விண்ணப்பங்கள் ஜூலை 4 வரை திறந்திருக்கும்

கோலாலம்பூர், ஜூன்.08-

பாலிடெக்னிக் இளங்கலைப் பட்டயக் கல்விக்கான 2025/2026 கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஜூலை 4 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று பலிடெக்னிக், சமூகக் கல்லூரி கல்வித் துறை ஜேபிபிகேகே அறிவித்துள்ளது. டிப்ளோமா, அட்வான்ஸ் டிப்ளோமா பட்டதாரிகளும், தொழில்முறைப் பயிற்சியை முடித்த இறுதித் தவணை டிப்ளோமா மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல், பொறியியல் தொழில்நுட்பம் அல்லது பொது - தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய துறைகளில் டிப்ளோமா பெற்றவர்கள், எஸ்டிபிஎம், ஸ்டாம், அல்லது APEL.A T-6 சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த இளங்கலைப் பட்டப்படிப்புகள் பேரா, உங்கு ஓமார் பலிடெக்னிக், சிலாங்கூர் சுல்தான் சலாஹூடின் அப்துல் அஸிஸ் ஷா பலிடெக்னிக், ஜோகூர் இப்ராஹிம் பலிடெக்னிக், பேரா சுல்தான் அஸ்லான் ஷா பலிடெக்னிக் ஆகிய நான்கு பலிடெக்னிக்குகளில் வழங்கப்படுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
விண்ணப்பங்கள் ஜூலை 4 வரை திறந்திருக்கும் | Thisaigal News