Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சனுசி அவதூறு வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
தற்போதைய செய்திகள்

சனுசி அவதூறு வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

Share:

கெடா மந்தரி பெசார் சனுசி நோர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளின் விசாரணையை செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வழக்கை மாற்றுவதற்கான சனுசியின் விண்ணப்பத்தை நீதிபதி Aslam Zainuddin அனுமதித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கோம்பாக், சிம்பாங் 4, தாமன் செலாயாங் முத்தியாரா - கம்போங் பென்டாஹாரா என்ற இடத்தில் சனுசி, கோபத்தைத் தூண்டும் வார்த்தைகள் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

செஷன் நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை நடத்த முடியாது என்பதாலும், சட்டச் சிக்கல்கள் இருக்கலாம் என்பதாலும் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சனுசி கோரி இருந்தார்.

Related News