Dec 2, 2025
Thisaigal NewsYouTube
​நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

​நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டார்

Share:

ஜோகூர், மெர்சிங் சாலையில் நேற்று காலையில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் காரோடு அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மெர்சிங், Jalan Nitar Utama சா​லையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரோடு காணாமல் போன பெண்ணின் உடல் ​இரவு 10.19 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் ​​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் தெரிவித்தனர்.


மரக்கிளைகள் மத்தியில் சிக்கிக்கிடந்த காரிலிருந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ​வீரர்கள் "Vehicle rockery System" முறையை கையாண்டதாக அவ்விலாகாவின் இடைக்கால இயக்குநர் Mohd Rizak Buang தெரிவித்தார். சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
அந்த Perodua Myvi காரில் இறந்து கிடந்த பெண், சரவாக்கை சேர்ந்த 24 வயது பெண் Tansharon என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

Related News