ஜொகூர் பாரு, மே 30-
ஜொகூர், மூவாரில் உள்ள இடங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையில் மொத்தம் 44 வெளிநாட்டவர்களை மலேசிய, ஜொகூர் குடிநுழைவுத்துறையினர் கைது செய்தனர்.
மூவார் கிளை குடிநுழைவு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட பகுதி முழுவதும் உள்ள இரும்பு தொழிற்சாலை உட்பட 11 வளாகங்கள் சோதனையிடப்பட்டன.
அவ்விடத்தில், அந்நிய பிரஜைகள் அனுமதியின்றி பணிபுரிவதாகவும் முறையான ஆவணங்கள் ஏதும் இன்றி நுழைவதாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில குடிநுழைவுத்துறையின் செயல் இயக்குநர் முகமது பைசல் ஷம்சுதீன் தெரிவித்தார்.
இதில் 110 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளை, பல்வேறு குற்றங்களுக்காக 15க்கும் 46க்கும் இடைப்பட்ட வயதுடைய தாய்லாந்தை சேர்ந்த 14 ஆண்கள், மூன்று பெண்கள், 20 வங்காளதேச ஆண்கள், சீனாவை சேர்ந்த மூன்று ஆண்கள் உட்பட ஓர் இந்தோனேசிய பெண்ணும் அடங்குவர் என்று முகமது பைசல் கூறினார்.








