May 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக மலேசியாவை விட்டு வெளியேற முயன்ற 7 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக மலேசியாவை விட்டு வெளியேற முயன்ற 7 வெளிநாட்டவர்கள் கைது

Share:

Klang, Teluk Gadong என்ற இடத்தில் சட்டவிரோதமாக மலேசியாவை விட்டு வெளியேற முயற்சித்த 7 வெளிநாட்டவர்களை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவ்விடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் மூலம் சந்தேகிக்கும் 29 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து வெளிநாட்டு ஆண்களும் இரண்டு வெளிநாட்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக Kuala Langat போலீஸ் தலைவர் Supt Ahmad Ridhwan Mohd Nor தெரிவித்தார்.

முறையான ஆவணங்கள் ஏதுமின்றி அந்நபர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக மலேசியாவை விட்டு வெளியேற முயன்றது விசாரணையில் தெரிய வந்ததாக Ahmad Ridhwan கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மேல் நடவடிக்கைகளுக்காக Banting காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் நேற்று குறிப்பிட்டார்.

மேலும், நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு அந்த 7 வெளிநாட்டவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Ahmad Ridhwan தகவல் அளித்தார்.

Related News