Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த சுலோகத்தை அகற்றுவீர்
தற்போதைய செய்திகள்

அந்த சுலோகத்தை அகற்றுவீர்

Share:

பக்காத்தான் ஹரப்பானில் பிரதான கட்சியாக விளங்கும் டிஏபி, மலாய்க்காரர்களின் ஆதரவை பெறவேண்டுமானால் அக்கட்சி கொண்டிருக்கின்ற "மலேசியா, மலேசியர்களுக்கே" என்ற அதன் சுலோகத்தை அகற்ற வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முஹம்மது கேட்டுக் கொண்டார்.

தனது கட்சியின் அரசிலமைப்பு சட்டத்திலிருந்து டிஏபி அந்த சுலோகத்தை அகற்றுவது மூலமே மலாய்க்காரர்களின் ஆதரவை அக்கட்சி பெறுவதற்குரிய சாத்தியம் இருப்பதாக முன்னாள் துணையமைச்சருமான நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.

ஒரு மதச் சார்பற்ற நாடாக உருவாக்கும் டிஏபியின் நோக்கத்தினால் மலாய்க்காரர்களின் ஆதரவை அக்கட்சி பெறமுடியாது காரணம், அக்கொள்கை மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் கோட்பாட்டிற்கு முரணானதாகும் என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.

Related News