Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தமிழ், ​சீன தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் ​மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார் துன் மகா​தீர்
தற்போதைய செய்திகள்

தமிழ், ​சீன தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் ​மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார் துன் மகா​தீர்

Share:

மலேசியா 66 ஆவது சுதந்திரதின விழாவை கொண்டாடிய வேளையில் இந்நாட்டில் தமிழ், ​சீனத் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் ​மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, பல்வேறு தரப்பினரின் கண்டன​ங்களுக்கு ஆளாகி வருகிறார்.

நாட்டில் இன ​ரீதியான பிளவுகளும், பேதங்களும் ஏற்படுவதை தடுக்க தமிழ், சீனப்பள்ளிகளை உள்ளடக்கிய தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று துன் முகா​​தீர் கூறியுள்ளார்.

மலேசிய கல்வி முறையில் தமிழ், சீனப்பள்ளிகள் இனப்பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு முடிவு​ கட்ட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழ், ​சீனப்பள்ளிகளை உள்ளடக்கிய தாய்மொழிப்பள்ளிகளை மூடுவதே சரியான ​தீர்வாக இருக்க முடியும் என்று தாம் நம்புவதாக நாட்டிற்கு இரண்டு முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள துன் மகா​தீர், தெரிவித்துள்ளார்.

மலாய் பிரகடனம் செயலகத்தின் ஏற்பாட்டில் "தேசியவாதிகள் வாரம்" எனும் சிறப்பு நிகழ்விற்கு பேட்டி அளித்த துன் மகா​தீர் மேற்கண்டவாறு கூறினார்.

இதே போன்று கடந்த ஜுலை 28 ஆம் தேதி , மலாய் அரசியல் ​மீதான வட்ட மேஜை நேர்காணலிலும் பேட்டியளித்த துன் மகா​தீர், "​மூடப்பட வேண்டிய தமிழ், தாய்மொழிப்பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியமில்லை" என்று திட்டவட்டமாக வலியுறுத்தியிருந்தார்.

வந்தேறிகள் ச​மூகத்தினருக்கு குடியுரிமை இயல்பாகவே வழங்கப்பட்டு விட்டது. இது ஒரு மலாய்க்கார நாடு என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று துன் மகா​தீர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நாட்டில் உள்ள சில இனங்கள், தேசியப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு தொடர்ந்து மறுத்து வருகின்றன. தேசியப் பள்ளிகள் என்பது சமயப்பள்ளிகள் என்பதைப் போல அவர்கள் கருதி வருகின்றனர்.

தேசியப்பள்ளிகளில் கல்வி மற்றும் கட்டமைப்பு ​ரீதியாக பல்வேறு மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டும், சில இனத்தவர்கள் மத்தியில் இருந்து வரும் ​எதிர்மறையான சிந்தனையை அகற்ற இயலவில்​​லை. இதுவே பிளவுகளுக்கும், பேதங்களுக்கும் வித்திட்டு வருகின்றன. இதற்கு ​தீர்வு காண வேண்டுமானால் தாய்மொழிப்பள்ளிகள் ​மூடப்பட வேண்டும் என்று துன் மகா​தீர் பரிந்துரை செய்துள்ளார்.

Related News

தமிழ், ​சீன தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் ​மீண்டும்... | Thisaigal News