Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்டிருந்த குழந்தை இறப்பு; காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை
தற்போதைய செய்திகள்

பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்டிருந்த குழந்தை இறப்பு; காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

Share:

புத்ராஜெயா, மார்ச் 21

புத்ராஜெயா, Presint 15-யிலுள்ள குழந்தை பராமரிப்பு இல்லத்தில் 3 மாதம் 6 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று திடிரென உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த அக்குழந்தை மீதான உடற்கூறு ஆய்வு, புதன்கிழமை மாலை மணி 3 வாக்கில் மேற்கொள்ளப்பட்டது. அக்குழந்தையின் உடல் உறுப்புகளிலிருந்து மாதிரியை மருத்துவர் மேற்கட்ட விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஆய்வக விசாரணை அறிக்கைகளுக்காக தனது தரப்பு காத்திருப்பதாக, புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அ அஸ்மாடி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட குழந்தை அந்த இல்லத்தில் விடப்பட்டு இரண்டே நாட்கள் ஆன நிலையில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. புத்ராஜெயா மருத்துவமனை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அக்குழந்தையின் மீது காயத்தழும்புகள் ஏதுமில்லாதது உறுதிபடுத்தப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து, அக்குழந்தையின் பெற்றோரிடமும் குழந்தை பராமரிப்பாளரிடமும் போலீஸ் விளக்கத்தை பதிவு செய்துள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்