Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நிதி திரட்டி மாதம் 10 ஆயிரம் வெள்ளி ஈட்டும் வெளிநாட்டுவாசிகள்
தற்போதைய செய்திகள்

நிதி திரட்டி மாதம் 10 ஆயிரம் வெள்ளி ஈட்டும் வெளிநாட்டுவாசிகள்

Share:

ஜோகூர், கெலாங் பாத்தா பகுதியில் உள்ள இரவுச் சந்தையில் மலேசியக் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனையில், பொய்க் காரணம் சொல்லி பொது மக்களிடம் நிதி திரட்டி சம்பாதிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்தனர்.

பொது மக்களிடம் இருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில், ஜோகூர் பாரு சமூக நல இலாகாவுடன் இணைந்து நடத்திய அச்சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறையில் இயக்குநர் பஹாருடின் தாஹிர் குறிப்பிட்டார்.

அனுதாபத்தைப் பெறுவதற்காக தஹ்ஃபிஸ் பள்ளிகள் அல்லது மத நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதாகக் காரணம் சொல்லி, நிதி திரட்டிய வெளிநாட்டுவாசிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் யாசகம் பெற்று வரும் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.

அவர்களில் சிலர் நாள் ஒன்றுக்கு 300 வெள்ளி முதல் மாதத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி வரை சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 34 முதல் 63 வயது வரையிலானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related News

நிதி திரட்டி மாதம் 10 ஆயிரம் வெள்ளி ஈட்டும் வெளிநாட்டுவாச... | Thisaigal News