Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஆறில் மூன்று குழாய் கிணறுகள் தோண்டும் நடவடிக்கை முடிந்தன
தற்போதைய செய்திகள்

ஆறில் மூன்று குழாய் கிணறுகள் தோண்டும் நடவடிக்கை முடிந்தன

Share:

மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் 3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆறு குழாய் கிணறுகளை தோண்டும் நடவடிக்கையில் மூன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட மூன்று கிணறுகளும் யூ.எம்.எஸ் வளாகத்தில் இருக்கின்ற நீர் நெருக்கடியைச் சமாளிக்க தேவையான நிலத்தடியாக கருதப்படும் என்று உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ முஸ்தஃபா சக்முட் தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தொட்டிகள் மற்றும் நீர் அமைப்புகளை நிறுவுதல், குடியிருப்பு பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று டத்தோ முஸ்தஃபா கூறினார்.

தற்போது மூன்று குழாய் கிணறுகள் தோண்டப்பட்டதை அடுத்து மாணவர்கள் தங்கும் விடுதிக்கு குழாய்கள் சீரமைக்கப்படுவதற்கு முன்பாக நீர் வடிகட்டியை நிறுவும் பணி ஒப்பந்தரார் மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார்.

Related News