Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சமய, கலாச்சார நடவடிக்கைகளை செம்மைப்படுத்தும்
தற்போதைய செய்திகள்

சமய, கலாச்சார நடவடிக்கைகளை செம்மைப்படுத்தும்

Share:

உலு சிலாங்கூர், மே 06-

மலேசிய இந்து சங்கத்தின் உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவை, சொந்த பணிமனையை பெற்றிருப்பது மூலம் இந்து சமயம் மற்றும் கலை, கலாச்சார நடவடிக்கைகளை மேலும் செம்மையுற நடத்த முடியும் என்று MUDA கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குருவிக்கும் ஒரு கூடு என்பது போல் தனது சேவையின் விரிவாக்கத்தில் ஒரு பகுதியாக மலேசிய இந்து சங்கத்தின் உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவை சொந்த பணிமணையைப் பெற்று இருப்பது, அதன் செயல்பாடிற்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் இந்த முயற்சியை தாம் ஆதரிப்பதுடன் வெகுவாக பாராட்டுவதாக அதன் பணிமனையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில் டாக்டர் சிவபிரகாஷ் மேற்கண்டவாறு கூறினார்.

உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் இந்த முயற்சியை பிற தொண்டூழிய அமைப்புகளும் ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்பதுடன் அதன் முயற்சி வெற்றிபெறுவதற்கு தாம் மிகச்சிறிய பங்களிப்பை வழங்கிய போதிலும் இத்திட்டத்திற்கு தாராளமாக நன்கொடை வழங்கிய வட்டார அன்பர்களுக்கும் தனது நன்றியை பதிவு செய்வதாக டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் தலைவர் இராதாகிருஷ்ணன், செயலாளர் பாலு, தொண்டர்மணி கனமூர்த்தி அரிகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணிமனை திறப்பு விழாவில் பேரவையின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பையும் டாக்டர் சிவபிரகாஷ் வெகுவாக பாராட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்