May 22, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜையை கொலை செய்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜையை கொலை செய்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

குவாந்தான், மே 29-

சக நாட்டவரை கொலை செய்ததாக மியன்மார் பிரஜை உட்பட இருவரை குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

42 வயது அஹ்மத் இஸ்ஹாக் ஜூரிட், மற்றும் 32 வயது முகமது தோயுப் முகமது யூசோப் ஆகியோர் மாஜிஸ்திரேட் தேங்கு எலியானா துவான் கமருசமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தலை அசைத்தனர்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவிருப்பதால் அந்நபர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 15 ஆம் தேதி மாலை 6.38 மணியளவில் குவாந்தானில் உள்ள ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட ஜாபர் ஆலம் லாலு -வை கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News