Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பத்தாங் காலியில் 'ஹேண்ட் பிரேக்' இழுக்க மறந்த முதியவர் கார் மோதி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பத்தாங் காலியில் 'ஹேண்ட் பிரேக்' இழுக்க மறந்த முதியவர் கார் மோதி உயிரிழப்பு

Share:

ஹுலு சிலாங்கூர், பத்தாங் காலியில், வீட்டின் முன்பு தமது காரை நிறுத்திய 67 வயது முதியவர், அதன் ஹேண்ட் பிரேக்கை இழுக்க மறந்ததால், அந்த கார் அவரது மேல் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இச்சம்பவத்தின் போது, அந்நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உயிரிழந்ததாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்துள்ளார்.

ஹேண்ட் பிரேக் இன்றி நிறுத்தப்பட்ட அந்த காரிலிருந்து இறங்கிய அவர், வீட்டின் வாயில் கதவை மூடச் சென்ற போது இவ்விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட அவரது உடலானது சவப்பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இப்ராஹிம் ஹுசின் குறிப்பிட்டுள்ளார்.

Related News