Jun 6, 2026
Thisaigal NewsYouTube
77 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம்
தற்போதைய செய்திகள்

77 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

Share:

காஜாங், மே.27-

நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 77 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை இயக்குனர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

கடமையை மீறுதல், அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், தகுதி பாராமல் ஆதாரங்களுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், விடுமுறை நாட்களில் வெளிநாட்டினர் அதிகம் கூடுவதால் அவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்று அர்த்தமல்ல என்றும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் தவறான பிம்பத்தை உருவாக்குவதாகவும் டத்தோ ஸாகாரியா கூறினார்.

கடந்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைகளில், ஆவணங்கள் இல்லாத 17 ஆயிரத்து 313 வெளிநாட்டினரும், அவர்களுக்கு அடைக்கலம் தந்த 789 முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு