ஜோகூர் பாரு, மே.27-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசி ராஜா ஸாரித் ஃசோபியா ஆகியோர், ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று Istana Bukit Serene -னில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் இணைந்து பெருநாள் விருந்துண்டனர்.
சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவின்படி, இந்த நிகழ்வில் ஜொகூர் ரீஜண்ட் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில், சே புவான் மாஹ்கோத்தா காலிடா ஜோகூர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் துங்கு பாங்லிமா ஜொகூர் துங்கு அப்துல் ரஹ்மான், துங்கு புத்ரா ஜொகூர் துங்கு அபு பக்கர் மற்றும் துங்கு துன் அமீனா, அவரது கணவர் டத்தோ டென்னிஸ் முஹம்மது அப்துல்லா ஆகியோரும் தங்களது பிள்ளைகளுடன் இந்த அரச குடும்ப விருந்தில் பங்கேற்றனர்.








