Jun 6, 2026
Thisaigal NewsYouTube
போலி மருத்துவ அறிக்கை விவகாரம்: சுகாதார அமைச்சு தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

போலி மருத்துவ அறிக்கை விவகாரம்: சுகாதார அமைச்சு தீவிர விசாரணை

Share:

கோலாலம்பூர், மே.27

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தைப்பிங் சிறைக் கலவரத்தின் போது, மருத்துவப் பணியாளர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகார் குறித்து சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை சுஹாகாம் (Suhakam) வெளியிட்ட பொது விசாரணை முடிவுகளைத் தொடர்ந்து, இந்தச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

போலி மருத்துவ அறிக்கைகள் தயாரிக்க மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உடந்தையாக இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அமைச்சு தீவிரமாக அணுகுகிறது. மருத்துவக் குறைபாடுகள் மற்றும் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து சுயேட்சை குழு விரிவான விசாரணை நடத்தும் என்று பொதுச் சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் இஸ்முனி போஹாரி தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு