May 28, 2026
Thisaigal NewsYouTube
ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

Share:

நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் 1,225 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையான ஜேஎஸ்பிடி அறிவித்துள்ளது.

இந்த விபத்துகளில் மொத்தம் 23 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், முந்தய நாளில் பதிவான 1,871 விபத்துகளுடன் ஒப்பிடுகையில், நேற்று பெருநாளன்று விபத்து எண்ணிக்கையானது 646 ஆக குறைந்துள்ளதாக ஜேஎஸ்பிடி தெரிவித்துள்ளது.

அதேவேளையில், கடந்த மே 26-ஆம் தேதி சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் மரணமடைந்த நிலையில், நேற்று மே 27-ஆம் தேதி 8 பேர் மரணமடைந்ததாகவும் ஜேஎஸ்பிடி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பெருநாள் காலங்களில் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து, எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு பொதுமக்களை ஜேஎஸ்பிடி அறிவுறுத்தியுள்ளது.

Related News