Jun 6, 2026
Thisaigal NewsYouTube
குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

Share:

புக்கிட் சாங்காட் ஆசா பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 19 வயது பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது குனுங் பத்து புத்தேவில், மலையேற்றத்தின் போது மாயமான மற்றொரு பெண்ணைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இச்சம்பவங்களால், தற்போது மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதன் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி, குனுங் பத்து புத்தேவில், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 49 வயதான ஜாஸ்லிண்டா சாலுடின் என்ற பெண் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன.

தேடுதல் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 வீரர்களோடு, ஹெலிகாப்டர் ஒன்றும், தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியோடு நிறுத்தப்பட்ட தேடுதல் பணிகள், இன்று காலை 8 மணி தொடங்கி மீண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்