May 22, 2026
Thisaigal NewsYouTube
வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்

Share:

பல சேமிப்பு கணக்குகளிலிருந்து 24.2 மில்லியன் வெள்ளியை கைப்பற்றுவதற்கு சிண்டிகேட்டுக்கு உடந்தையாக இருந்த ஒரு வங்கியின் ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சந்தேகத்திற்கிடமான பண பரிமாற்றங்கள் குறித்து இம்மாத தொடக்கத்தில் தமது தரப்புக்கு நான்கு புகார்கள் கிடைக்கப் பெற்றதாக புக்கிட் அமான் குற்றப் புலனா‌ய்வுத் துறையின் இயக்குநர் Datuk Seri Ramli Mohamed Yoosuf அறிவித்தார்.

Kota Kinabalu, Sabah ஆகிய இடங்களில் பல்வேறு சேமிப்பு வங்கியிலிருந்து அப்பணம் எடுக்கப்பட்டிருப்பதாக Ramli Mohamed கூறினார். அதை அடுத்து, சந்தேகிக்கும் 38 வயது அந்த வங்கி ஊழியர் Kota Kinabalu - வில் கைது செய்யப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டு வரும் வேளை, இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக Ramli Mohamed தகவலிட்டார்.

Related News