கோலாலம்பூர்,பிப்.1
புக்கிட் சுபாங், பங்சாபூரி மெலாத்தி,ப்லோக் 15-யில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் கொலை வழக்கில் சந்தேகிக்கும் இந்தோனேசிய ஆடவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
20 வயதுடைய இந்தோனேசியர் தம்மை தற்காத்துக் கொள்ள 28 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியால் போலீசாரை தாக்க முற்பட்ட போது சுட்டு கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்தார்.
நேற்று மாலை 5.50 மணியளவில் சிலாங்கூர் போலீஸ்படைத் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் பெட்டாலிங் ஜெயா ஐ.பி.டி ஆகிய காவல்துறையை சேர்ந்தவர்கள் வெற்றிகரமாக இச்சோதனையில் ஈடுப்பட்டதாக ஹுசெயின் ஒமார் கூறினார்.
சம்பவ இடத்திற்கு சென்றடைந்த போலீஸ் குழுக்கள் பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாத வேளையில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதற்கு அடுத்துதான் இத்தகைய சம்பவங்கள் நடந்ததாக ஹுசெயின் ஒமார் அறிவித்தார்.
குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹுசெயின் ஒமார் விவரித்தார்.








