Oct 8, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் அண்ணியிடம் பாலியல் பலாத்காரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் அண்ணியிடம் பாலியல் பலாத்காரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது முன்னாள் அண்ணியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 31 வயது ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த ஆடவர், நீதிபதி சித்தி ஷாகிரா மோதாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் குற்றத்தை ஒப்பினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அந்நபர், 31 வயதுடைய தனது முன்னாள் அண்ணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிராக தனது முன்னாள் அண்ணி போலீசில் புகார் அளித்து இருப்பதை உணர்ந்து, கடந்த 2 ஆண்டு காலமாகத் தலைமறைவாக இருந்து வந்த அந்த நபர், போதைப்பொருள் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து அவரின் பின்னணி ஆராயப்பட்டது. அதில் அந்த நபர், போலீசாரால் தேடப்பட்டு வரும் நபர்களின் பெயர்ப் பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபருக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →