Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் தலைத்தெறிக்க ஓடிய மாடுகளால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் தலைத்தெறிக்க ஓடிய மாடுகளால் பரபரப்பு

Share:

DAMANSARA-PUCHONG நெடுஞ்சாலை - LDP-யில் நேற்று இரு மாடுகள் தலைத்தெறிக்க ஓடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

KELANA JAYA-விலிருந்து PUCHONG-ங்கை நோக்கி செல்லும் அச்சாலையில் ஓடிய அவ்விரு மாடுகளால், சிறிய அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அது குறித்த காணொலிகள், சமூக ஊடகங்களில் பரவலாகியிருந்த நிலையில், அதில், மோட்டார்சைக்கிளில் வந்திருந்த இரு ஆடவர்கள் அவ்விரு மாடுகளைக் கட்டுப்படுத்த முயற்சித்ததை காண முடிந்தது.

மற்றொரு காணொலியில், அவ்விரு மாடுகளும் சாலை தடுப்பை தாண்டி செல்ல முற்பட்ட போது, அதில், ஒன்று PERODUA MYVI ரகக் காரை மோதி கீழே விழுந்தது.

விழுந்த வேகத்தில் எழுந்திருத்த அம்மாடு, மற்றொரு மாட்டை நோக்கி ஓடியது. ஆயினும், அக்காணொலியில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிக்கு என்ன நேர்ந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

இன்று இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஹாஜி பெருநாளுக்கு பலியிடுவதற்காக, நேற்று கொண்டுவரப்பட்ட வழியில் அம்மாடுகள் தப்பித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related News