நாட்டின் சுபிச்சத்தன்மையை நினைவில் வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும் என பிரதமர் துறை மத விவகார அமைச்சர் டத்தோ டாக்டர். முகமட் நயிம் மொக்தார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் சுபிச்சத் தன்மை நிலைகுலைவாறு பேசுபவர்களின் பேச்சை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் இஸ்லாம் மதம் மற்றும் அதன் விவகாரம் தொடர்பாக கைதேர்ந்த நிபுணத்துவம் பெற்ற மதவாதிகள் கொண்ட மாநில குழுக்கள் இருப்பதால், மதத்தைக் கொண்டு அரசியல் நடத்துபவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், மதத்தைக் கொண்டு நாட்டில் கலவரம், சலசலப்பு, பிரச்சனைகள் , சண்டைகள் ஏற்படுத்துவாறு பொறுப்பின்றி பேசுவர்களை மக்கள் புறக்கனிக்க வேண்வதோடு இஸ்லாம் மதம் சார்ந்து முடிவெடுக்க நாட்டில் அரசாங்கம் மற்றும் இஸ்லாம் இலாகாங்கள் அனைத்து மாநிலங்களும் உள்ளன என முகமது நயிம் மொக்தார் தெளிவுப்படுத்தினார்.








