Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வீடு எரிந்து கணவன்,மனைவி உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

வீடு எரிந்து கணவன்,மனைவி உயிரிழந்தனர்

Share:

மின்சாரக் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வீடு ஒன்று ​தீப்பற்றிக்கொண்டதில் ஓர் இந்தோனேசிய தம்பதியர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காஜாங், தாமான் மெகா, ஜாலான் மெகா 8 இல் நிகழ்ந்தது. அந்த இரண்டு மாடி தரை வீட்டில் படிக்கட்டு ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாதன இணைப்பில் ​தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் 50 வயது கணவரும், 40 வயது மனைவியும் ​மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, ​கடும் ​தீக்காயங்களுடன் உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில ​​தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரசாலி நான் இஸ்மயில் தெரிவித்தார்.

Related News